Thursday, June 25, 2009

வாழையடி வாழை

அந்த வீடு தெருவின் கடைசியில் இருந்தது. சிமெண்ட் ரோடிலிருந்து ஒரு அடி உள்வாங்கியிருந்து. காப்பி கலர் பெயிண்ட் அடித்த க்ரில் கதவு ஆள் உயரம் இருந்தது. நீல நிற சுண்ணாம்பு. அடையாளம் சரியாக இருப்பதை உணர்ந்து, வெளியே இருந்து குரல் கொடுத்தாள் சாந்தி. அவள் அணிந்திருந்த அந்த பூப்போட்ட பாவடையில் பூக்கள் உதிர்ந்திருந்தன.

“அக்கா, அக்கா”

உள்ளே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் இவளுக்கு நன்றாக கேட்டது. அவளுடைய குரல் உள்ளிருப்பவர்களுக்கு கேட்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.

க்ரில் கதவை உள்ளே தள்ளிவிட்டு, போர்டிக்கோவிற்குள் சென்றாள். காலிங் பெல்லை அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் வெல்கம் என்று எழுதியிருந்த ஸ்கிரினை திறந்து வந்த அந்த அம்மாவிற்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம்.

“என்னம்மா வேணும் உனக்கு?”

“என் பேரு சாந்திக்கா. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ரவி அண்ணாக்கிட்ட சொல்லியிருந்தீங்களாம். அவர் தான் அனுப்பனார்” சொல்லிவிட்டு அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.

“உன் வீடு எங்கமா இருக்கு?”

“ரெண்டு தெரு தள்ளி இருக்குற அந்த ஆட்டோ ஸ்டாண்டு பின்னாடி இருக்குக்கா”

“படிக்கறியாமா? வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”

“பத்தாவது படிக்கறேன்கா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல லோடு எறக்குதுக்கா. அம்மா வீட்டு வேலை பாக்குதுக்கா. ஒரு அக்கா பதினொண்ணாவது படிக்குதுக்கா. ரெண்டு தங்கச்சி இருக்குங்கக்கா”

“இங்க வேலை அதிகம் இல்லைமா. உங்க அம்மாவை வேணும்னா வர சொல்லேன்”

“அம்மா ஏற்கனவே மூணு வீட்ல வேலைப் பாக்குதுங்கக்கா. காலைல ஆறு மணிக்கு போச்சுனா பத்து மணிக்கு தான் வரும். நீங்க காலைல ஏழு மணிக்கு வரணும்னு சொன்னீங்கனு ரவி அண்ணா சொல்லுச்சு. அதான் நான் வந்தேன்க்கா”

“வயசுப் பொண்ண வேலைக்கு வெச்சா ஐயா திட்டுவாருனு பாக்கறேன். வெறும் பாத்திரம் வெளக்குற வேலை தான். துணி தொவைக்கறதுக்கு எல்லாம் மெஷின் இருக்கு. என் பையன் வாங்கி கொடுத்திருக்கான். ரெண்டே பேர் தான். வந்தா அர மணி நேரத்துல முடிஞ்சிடும். மாசம் எரநூறு ரூபா. உங்க அம்மா வர முடியுமானு கேட்டு பாரும்மா”

“பத்து மணிக்கப்பறம்னா பரவாயில்லையாக்கா?”

”பத்து மணிக்கு அப்பறமா? வீட்ல சமையல் எல்லாம் செய்ய வேணாமா? ஏழு மணிக்குள்ள எப்ப வந்தாலும் சரி. கேட்டு சொல்லு”

அதற்கு பிறகு என்ன பேசுவதென்று சாந்திக்கு தெரியவில்லை. வார்த்தைகளை தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. அவளுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“சரிக்கா”

முதல் வேலைக்கான இண்டர்வியூவில் தோற்ற சோகம் அவளுடைய நடையில் தெரிந்தது. இரண்டு பேர் இருக்கும் வீட்டில் பாத்திரம் விளக்க மாசம் இருநூறு ரூபாய் அதிகம் என்று அவளுக்கு தெரியும். அவளுடைய அம்மா வேலை செய்யும் டாக்டர் வீட்டில் நானூறு ரூபாயிற்கு துணி துவைத்து, வீட்டை கூட்டி, வெள்ளி மற்றும் விரத நாட்களில் வீட்டை கழுவி, பாத்திரம் விளக்கி, சமையலுக்கும் உதவ வேண்டும். ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது.

ஒரு வாரம் சென்ற நிலையில் எலக்ட்ரீஷியன் ரவி அண்ணாவின் குரல் வெளியே கேட்டது. சாந்தியின் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்றாள்.

“அதெல்லாம் ஏழு மணிக்குள்ள வந்துடுவா. சொல்லிடு” அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். முதல் வேலை கிடைத்துவிட்டது.

பழகிய வேலைதான் என்றாலும் பழகாத இடம் என்பதால் பதட்டத்துடன் சென்றாள்.

“வாம்மா. நான் மொதல்ல ஐயாக்கிட்ட சொல்லும் போது வேணாம்னு தான் சொன்னாரு. அப்பறம் படிக்கிற பொண்ணு, மாசம் இரநூறு ரூபாய் கிடைச்சா படிப்புக்கு உதவும்னு நான் சொன்ன உடனே சரினு சொல்லிட்டாரு”

என்ன சொல்வதென்று தெரியாமல் மெலிதாக சிரித்து வைத்தாள்.

“இங்க பாரும்மா. வேலை அதிகம் இல்ல. பாத்திரம் மட்டும் வெளக்கினா போதும். ரெண்டே பேர் தான். சரியா?”

“சரிக்கா”

“ஏழு மணிக்கு வந்தா அர மணி நேரத்துல ஓடிடலாம். முடிஞ்சா சாயந்திரம் ஆறு மணிக்கு ஒரு நடை வந்துட்டு போ. வேலை பாதியா குறைஞ்சிடும். சரியா?”

“சரிக்கா”


இரண்டு பேருக்கு சமையலுக்கு பயன்படும் பாத்திரத்திற்கும் நான்கு பேருக்கு சமையலுக்கு தேவைப்படும் பாத்திரத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை முதல் நாளே புரிந்து கொண்டாள். தினமும் காலை ஏழு மணிக்கு முன்பு வந்து எட்டு மணிக்குள் சென்று கொண்டிருந்தாள். பூஜை விளக்கில் எண்ணெய் சரியாக போகவில்லை, குக்கரில் அரிசி ஒட்டிக் கொண்டிருந்தது என்ற இரண்டு கம்ப்ளைண்ட் மட்டும் தான் ஒரு வாரத்தில் வந்திருந்தது.

ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

“சாந்தி கொஞ்சம் இரு. ஒரு வாய் காபி குடிச்சிட்டு போ”

“இல்லைங்கக்கா” தயங்கினாள்.

“உனக்குனு தனியாவாப் போட போறேன். இரு குடிச்சிட்டு போகலாம்”

வாசளருகே தயங்கி நின்று கொண்டிருந்தாள். எங்கே நிற்பது என்று அவளுக்கு தெரியவில்லை. ஹாலில் பெரிய எல்.சி.டி டீவி இருந்தது. அவ்வளவு பெரிய டீவியை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

”அப்படியே நிக்கற நேரத்துல, அந்த மூலையில தொடப்பம் இருக்கு பாரு. அதை எடுத்து வீட்டைப் பெருக்கிடுமா. கால் முட்டி எல்லாம் வலிக்குது. அங்கங்க ஆம்பளைங்க சமையலே செய்யறாங்க. இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. பொண்டாட்டிக்கு முடியலையே, அவளுக்கும் வயசாச்சே, கொஞ்சமாவது உதவணும்னு இந்த ஆம்பிளைக்கு தோணுதா”

வீட்டம்மா புலம்பல் நிற்பதற்கும் இவள் பெருக்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பித்தளை டம்ளரில் காப்பி அவளுக்கு தயாராக இருந்தது. அடுத்த நாள் அது டீயாக மாறியிருந்தது. அதன் பிறகு அவளுக்கு தினமும் டீ கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளிலும் விரத நாட்களிலும் டிபன் கிடைத்தது. அதற்கு காத்திருக்கும் நேரத்தில், வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகியிருந்தது.

“சாந்தி, முழாண்டு லீவுக்கு என் பொண்ணும், பேரப் பசங்களும் வரப் போறாங்க. துணி எல்லாம் அதிகமா தொவைக்க வேண்டியது இருக்கும். மெஷின்ல ரெண்டு வாட்டி போட்டா கரண்ட் பில்லு அதிகமாகும், தேவையில்லாம கவர்மெண்ட்க்கு காசு போகும். அதுக்கு பதிலா அது இல்லாதவங்களுக்கு போச்சுனா நல்லது. உங்க அம்மாவை வேணா பதினோரு மணிக்கு அப்பறம் வர சொல்லேன். சேர்த்து நானூரு ரூபாயா வாங்கிக்கலாம்”

“நானே தொவைக்கறேன்கா. எனக்கும் முழாண்டு லீவு தான். வீட்ல சும்மா தான் இருக்கேன்”

“அதுவும் சரிதான். உன் வயசுக்கெல்லாம் நான் கைல பச்சப்புள்ளயோட குடும்பமே நடத்தினேன்”

அவள் நினைத்ததைப் போல துணி துவைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்த வீட்டம்மாவின் பேரப் பிள்ளைகள் கிஷ்கிந்தாவிலிருந்து வந்திருப்பார்கள் போல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று துணிகள் மாற்றினார்கள். அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் அழுக்காக்கினர். அதை விட அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்கு சுத்தமாக புரியாதது தான் கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டம்மாவிற்கும் புரியவில்லை என்பதில் ஒரு திருப்தி. பதினைந்து நாட்களில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நானூறு முன்னூறாகியதில் அவளுக்கு வருத்தம் இல்லை.

”என்ன சாந்தி பத்தாவது பாஸ் பண்ணதுக்கு சாக்லேட் எல்லாம் இல்லையா?”

“சாயந்தரம் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்கக்கா”

“சரி, மார்க் என்ன?”

“முன்னூத்தி எழுவத்தி எட்டுக்கா”

“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”

வீட்டம்மாவின் பையன் இதுவரை சாப்பிட்டத் தட்டை நகர்த்தியது கூட இல்லை என்பது அந்த வீட்டம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது.

”இந்தா சாந்தி முன்னூறு ரூபா. காசு செலவுப் பண்ணாம புக் வாங்கிக்கோ. ஒழுங்கா படி. புரியுதா?”

“அக்கா எப்படி கேக்கறதுனு தெரியல. இந்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு பாவடை தாவணிக் கட்டிட்டு போகணும். புது யூனிஃபார்ம் தைக்கணும். அம்மா வாங்கன காசு அக்காக்கு புக் வாங்கறதுக்கு சரியா போச்சு. ஒரு இரநூறு ரூபா சேர்த்து கொடுத்தா கொஞ்சம் பரவாலயா இருக்கும். சம்பளத்துல அம்பது அம்பது ரூபாயா பிடிச்சிக்கோங்கக்கா”

“இரநூறு ருபாயா? அவ்வளவு பணம் இப்ப இல்லையே. நான் ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன். ஆனா இந்த அம்பது அம்பதா பிடிக்கறது எல்லாம் வேணாம். அடுத்த மாசத்துல மொத்தமா பிடிச்சிக்குவேன். சரியா?”

“சரிக்கா”

எப்படியோ பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள்.

பத்து நாட்கள் சென்றிருந்த நிலையில்,

“என்ன சாந்தி, இந்த நேரத்துல வந்திருக்க?”

“பள்ளிக்கூடத்துல இருந்து வரேன்கா” அவள் கண்கள் கலங்கியிருந்தன.

“என்ன ஆச்சு? டல்லா இருக்க”

பேச ஆரம்பிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள்.

“என்ன ஆச்சு. அழாத சொல்லு”

“போன வருஷமே பள்ளிக்கூடத்துல யூனிஃபார்ம் கலர் மாத்தறேனு சொன்னாங்க. அப்பறம் மாத்தல. இப்ப போனா கலர் மாத்திட்டேனு சொல்றாங்க. நிறையப் பேர் துணி வாங்கி தைச்சிட்டோம்னு சொன்னோம். போன வருஷமே மாத்தறோம்னு சொன்னோம் இல்ல. அதை விசாரிக்காம நீங்க எப்படி எடுக்கலாம்னு திட்டினாங்கக்கா. எல்லாரும் சொல்லியும் கேக்க முடியாதுனு சொல்லிட்டாங்கக்கா. நான் ரெண்டு செட்டு தச்சிட்டேன்கா” திணறி திணறி சொல்லி முடித்தாள்.

“படிக்கிற பொண்ணு இப்படியா இருப்ப? என்ன கலர் யூனிஃபார்ம்னு விசாரிக்காமலா தைப்பாங்க?”

”இல்லைங்கக்கா. அதைப் பத்தி எதுவுமே சொல்லலைங்கக்கா. மார்க் ஷீட் வாங்க போகும் போது கூட எதுவும் சொல்லலை. இப்ப தான் அட்மிஷன் போடும் போது சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனு தெரியலைங்கக்கா”

“உனக்கு போன தடவ சேர்த்து காசு கொடுத்தே நான் ஐயாகிட்ட திட்டு வாங்கினேன். இதை சொன்னா எனக்கு திட்டு விழும். படிப்புல அக்கரை இல்லாத பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு காசு கொடுக்கறனு”

என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த நாள் வழக்கம் போல் ஏழு மணிக்குள் சென்றுவிட்டாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டம்மா எதுவும் விசாரிக்கவில்லை. அவளே பேச ஆரம்பித்தாள்.

“அக்கா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்கக்கா”

“ஏன்மா படிப்பை நிறுத்திட்டயா?”

“இல்லைக்கா. நேத்து ராத்திரி வீட்ல ஒரே சண்டைங்கக்கா. என்னை ஒரு வருஷம் படிப்பை நிறுத்த சொல்லி அப்பா சொல்லிடுச்சி. எனக்கு தான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசையா இருக்குக்கா. நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. அவுங்களுக்கும் என்ன மாதிரியே வேல கிடைச்சா எப்படியும் மொத மாசம் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போயிடலாம்கா. இல்லைனா ஒரு வருஷம் வீட்ல தான். அப்பறமும் படிக்க முடியுமானு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்கக்கா. அவுங்களும் என்னை மாதிரியே நல்லா பாத்திரம் வெளக்குவாங்கக்கா”

.........................


82 comments:

வெட்டிப்பயல் said...

கதைக்கு பேர் மாத்தணும். வினைத்தொகைக்கு பதிலா என்ன வைக்கலாம்?

பினாத்தல் சுரேஷ் said...

வாழையடி வாழை.

கதை நல்லா இருந்தது வெட்டி.

cheena (சீனா) said...

கதை நல்லாவே இருக்கு - இயல்பான நடை - இன்றைய நிதர்சன உண்மை -உரையாடல்கள் - ஆங்காங்கே கருத்துகள் - பலே பலே !

வெற்றி பெற நல்வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

கதை அருமை பாலாஜி!

வாழையடி வாழை - நல்ல தலைப்பு!

வெட்டிப்பயல் said...

//பினாத்தல் சுரேஷ் said...
வாழையடி வாழை.
//
சூப்பர்.. அதையே வெச்சாச்சு பாஸ் :)

//கதை நல்லா இருந்தது வெட்டி.
//

ரொம்ப நன்றி தல. எல்லாம் நீங்க கொடுக்குற உற்சாகம் தான் காரணம் :)

வெட்டிப்பயல் said...

//cheena (சீனா) said...
கதை நல்லாவே இருக்கு - இயல்பான நடை - இன்றைய நிதர்சன உண்மை -உரையாடல்கள் - ஆங்காங்கே கருத்துகள் - பலே பலே !

வெற்றி பெற நல்வாழ்த்துகள்

//

மிக்க நன்றி சீனா சார்...

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

வெட்டிப்பயல் said...

// நாமக்கல் சிபி said...
கதை அருமை பாலாஜி!

வாழையடி வாழை - நல்ல தலைப்பு!

//

மிக்க நன்றி தள :)

Kumky said...

வெட்டி ,
கதையின் நடை இயல்பாக இருக்கிறது.
“என்று விடியும்?”என்ற தலைப்பை பரிந்துரைக்கிறேன்.

மங்களூர் சிவா said...

பாலாஜி கதை அருமை அப்படின்னு மட்டும் பின்னூட்டம் இட்டு செல்ல விரும்பவில்லை. மனசுல ஊசி வைச்சி குத்துர மாதிரி வலிக்குது :(((

ஷங்கி said...

நல்லாயிருக்கு!!!, ஆமா, நீங்க ரெண்டு கதைகளுக்கும் பரிசு வாங்கிருவீங்களோ?

பரிசல்காரன் said...

பாலாஜி

இது டாபிகல் ஸ்டோரி பாலாஜி. சமீபத்தில் ஒரு பெண் யூனிஃபார்ம் வாங்க காசில்லாமல் தற்கொலை செய்துகொண்டாள் தெரியுமா?

கதையின் நடைதான் உங்கள் ப்ளஸ். கொஞ்சம் கொஞ்சமாக சம்பவ இடத்துக்கே வாசிப்பவர்களையும் கொண்டுவந்து உட்காரவைக்கிறது.

அட்வான்ஸ் வாழ்த்துகள்!

நாமக்கல் சிபி said...

ம்ஹூம்!
:(

வெட்டிப்பயல் said...

//கும்க்கி said...
வெட்டி ,
கதையின் நடை இயல்பாக இருக்கிறது.
“என்று விடியும்?”என்ற தலைப்பை பரிந்துரைக்கிறேன்//

மிக்க நன்றி கும்க்கி...

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...
பாலாஜி கதை அருமை அப்படின்னு மட்டும் பின்னூட்டம் இட்டு செல்ல விரும்பவில்லை. மனசுல ஊசி வைச்சி குத்துர மாதிரி வலிக்குது :(((

//

சிவாண்ணே,
என்ன சொல்றதுனு தெரியல.

மிக்க நன்றினு மட்டும் இப்பொழுதிக்கு சொல்லிக்கறேன்...

வெட்டிப்பயல் said...

//சங்கா said...
நல்லாயிருக்கு!!!, ஆமா, நீங்க ரெண்டு கதைகளுக்கும் பரிசு வாங்கிருவீங்களோ?

//

பிம்பிலிக்கா பிலாக்கினு சொல்லிடுவாங்க. ஒண்ணாவது கிடைக்கும்னு தான் இந்த முயற்சி :)

வெட்டிப்பயல் said...

//பரிசல்காரன் said...
பாலாஜி

இது டாபிகல் ஸ்டோரி பாலாஜி. சமீபத்தில் ஒரு பெண் யூனிஃபார்ம் வாங்க காசில்லாமல் தற்கொலை செய்துகொண்டாள் தெரியுமா?//

இது தெரியாது பரிசல். கேட்கவே கொடுமையா இருக்கு :(

உதவறதுக்கு நிறைய பேர் இருக்கோம். அதை எப்படி சேர்க்கறதுனு தான் தெரியல :(

//
கதையின் நடைதான் உங்கள் ப்ளஸ். கொஞ்சம் கொஞ்சமாக சம்பவ இடத்துக்கே வாசிப்பவர்களையும் கொண்டுவந்து உட்காரவைக்கிறது.

அட்வான்ஸ் வாழ்த்துகள்!

//

மிக்க நன்றி பரிசல்...

குடுகுடுப்பை said...

அருமை பாலாஜி. ஏனோதானோன்னு படிக்க ஆரம்பிச்சேன். மனசு கனத்துப்போச்சு......

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு பாலாஜி. வாழையடி வாழைங்குறது மனசைப் பிசைகிறது

இராம்/Raam said...

பாலாஜி,

கதை அருமை'ப்பா... :)

மனுநீதி said...

அருமையான கதை பாலாஜி. அதை narrate பண்ணிய விதம் மிக அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Ramprasad said...

kangal kalangivittana

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

FunScribbler said...

அண்ண்ண்ண்ண்ண்ண்ணா!!!!! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. simply superb! awesome!

கதை படிச்சு முடிச்சபிறகு, கண்ணீர் வந்திடுச்சு. அதை தவிர்க்கமுடியல. கன்னத்துல வழிஞ்சபோ, அதை துடைக்க மனம் வரல... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்துச்சு!

சாந்தி 'அக்கா அக்கா'ன்னு கூப்பிட்டது இன்னும் காதுல ஒலிச்சுகிட்டு இருக்கு!!

நிச்சயமா வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்னை பொருத்தவரை!!

nila said...

அண்ணா அருமையான கதை நடை.... என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.. வலியை உணர ஆரம்பித்தால் தான் எழுத்து உண்மையாய் இருக்கும்னு.... இங்கே உங்கள் எழுத்தின் மூலம் அந்த வலியை உணர்ந்தேன்... வெற்றி பெறவாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

//குடுகுடுப்பை said...
அருமை பாலாஜி. ஏனோதானோன்னு படிக்க ஆரம்பிச்சேன். மனசு கனத்துப்போச்சு......

//

மிக்க நன்றி குடுகுடுப்பை...

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
நல்லா இருக்கு பாலாஜி. வாழையடி வாழைங்குறது மனசைப் பிசைகிறது

//

மிக்க நன்றி மு.க

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...
பாலாஜி,

கதை அருமை'ப்பா... :)

//

நன்றிண்ணே :)

வெட்டிப்பயல் said...

//மனுநீதி said...
அருமையான கதை பாலாஜி. அதை narrate பண்ணிய விதம் மிக அருமை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

//

மிக்க நன்றி மனுநீதி...

வெட்டிப்பயல் said...

//Prasad said...
kangal kalangivittana//

பின்னூட்டத்திற்கு நன்றி பிரசாத்.

வெட்டிப்பயல் said...

//T.V.Radhakrishnan said...
வெற்றி பெற வாழ்த்துகள்

//

மிக்க நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

//Thamizhmaangani said...
அண்ண்ண்ண்ண்ண்ண்ணா!!!!! எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. simply superb! awesome!

கதை படிச்சு முடிச்சபிறகு, கண்ணீர் வந்திடுச்சு. அதை தவிர்க்கமுடியல. கன்னத்துல வழிஞ்சபோ, அதை துடைக்க மனம் வரல... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்துச்சு!

சாந்தி 'அக்கா அக்கா'ன்னு கூப்பிட்டது இன்னும் காதுல ஒலிச்சுகிட்டு இருக்கு!!

நிச்சயமா வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்னை பொருத்தவரை!!

//

ரொம்ப நன்றிமா.. இந்த பின்னூட்டம் பார்த்தவுடனே ஜெயிச்ச சந்தோஷம் வந்துடுச்சு :)

இந்த மாதிரி பின்னூட்டம் தான் தொடர்ந்து எழுத வைக்குது.

வெட்டிப்பயல் said...

// Nila said...
அண்ணா அருமையான கதை நடை.... என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்.. வலியை உணர ஆரம்பித்தால் தான் எழுத்து உண்மையாய் இருக்கும்னு.... இங்கே உங்கள் எழுத்தின் மூலம் அந்த வலியை உணர்ந்தேன்... வெற்றி பெறவாழ்த்துக்கள்

//

மிக்க நன்றி நிலா. இதே கதையை இன்னும் அழகா கொண்டு வந்திருக்கலாம். எனக்கு சரியா நரேட் பண்ண வரல. உங்க பின்னூட்டம் எல்லாம் பார்த்தவுடனே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

Rajalakshmi Pakkirisamy said...

வெற்றி பெற வாழ்த்துகள்

vaishnavi said...

கதை அழ வைத்து விட்டது. have been reading ur blog so many years but dis s d first time i wanted to comment...so painful story...all d best..

நாகை சிவா said...

Good

Anonymous said...

I Liked the story very much.

தேவன் மாயம் said...

வாழையடிவாழை ! தலைப்பு கதைக்குப் பொருத்தம்!!

தேவன் மாயம் said...

கதை பரிசுபெற வாழ்த்துகிறேன்!

வெட்டிப்பயல் said...

//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
வெற்றி பெற வாழ்த்துகள்

June 26, 2009 5:12 PM//

மிக்க நன்றி இராஜலெட்சுமி :)

வெட்டிப்பயல் said...

//vaishnavi said...
கதை அழ வைத்து விட்டது. have been reading ur blog so many years but dis s d first time i wanted to comment...so painful story...all d best..//

மிக்க நன்றி வைஷ்ணவி...

போட்டில ஜெயிக்கலனாலும் உங்க பின்னூட்டம் எல்லாம் கொடுக்குற சந்தோஷமே போதும் :)

வெட்டிப்பயல் said...

// நாகை சிவா said...
Good//

புலி,
இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டீங்க :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
I Liked the story very much.

//

மிக்க நன்றி நண்பரே!!!

வெட்டிப்பயல் said...

// thevanmayam said...
வாழையடிவாழை ! தலைப்பு கதைக்குப் பொருத்தம்!!

//

மிக்க நன்றி டாக்டர் :)

விக்னேஷ்வரி said...

ரொம்ப டச்சிங்கா இருந்தது. கண் கலங்கிடுச்சு. வாழ்த்துக்கள் சார்.

ஆ! இதழ்கள் said...

நான் பொதுவா நெட்ல கதை படிக்கிறது கிடையாது. (சிலருடையது exception)

எழுதியது வெட்டிப்பயல் என்ற ஒரே காரணத்திற்காக வீம்பாக வாசிக்க ஆரம்பித்தேன். வெகு இயல்பான அருமையான கதை. பிடித்திருந்தது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Selva said...

Balaji ..
Kathai Super ...
Romba improve ayirukku unnodaya ezhuthu .. Pinniirukke po ...

Selva said...

Kathaiya Fulla padicha etho namakku nadantha maari oru feeling irukku .... Sollrakke ille
Nee Kalakkitte da ..

வெட்டிப்பயல் said...

//விக்னேஷ்வரி said...
ரொம்ப டச்சிங்கா இருந்தது. கண் கலங்கிடுச்சு. வாழ்த்துக்கள் சார்.

June 30, 2009 3:15 AM//

மிக்க நன்றி விக்னேஷ்வரி...

வெட்டிப்பயல் said...

// ஆ! இதழ்கள் said...
நான் பொதுவா நெட்ல கதை படிக்கிறது கிடையாது. (சிலருடையது exception)

எழுதியது வெட்டிப்பயல் என்ற ஒரே காரணத்திற்காக வீம்பாக வாசிக்க ஆரம்பித்தேன். வெகு இயல்பான அருமையான கதை. பிடித்திருந்தது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

//

மிக்க நன்றி ஆனந்த்...

உங்களை ஏமாற்றதது மிக்க மகிழ்ச்சி...

இதே மாதிரி நெட்ல நிறைய நல்ல கதைகள் இருக்கு... தயங்காம படிக்கலாம்...

வெட்டிப்பயல் said...

// Selva said...
Balaji ..
Kathai Super ...
Romba improve ayirukku unnodaya ezhuthu .. Pinniirukke po ...//

ரொம்ப தேங்ஸ்டா மச்சான்...

இப்ப தான் சாஃப்ட்வேரை விட்டு வெளிய வர முயற்சி செய்யறேன் :)

முபாரக் said...

நல்லாருக்குங்க

Cable சங்கர் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

மாசற்ற கொடி said...

ரொம்ப நல்லா வந்திருக்கு. நெஞ்சை கனக்க வைத்த கதை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாசற்ற கொடி

வெட்டிப்பயல் said...

//முபாரக் said...
நல்லாருக்குங்க

//

மிக்க நன்றி முபாரக்:)

வெட்டிப்பயல் said...

//Cable Sankar said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்

//

மிக்க நன்றி கே.ச :)

வெட்டிப்பயல் said...

// மாசற்ற கொடி said...
ரொம்ப நல்லா வந்திருக்கு. நெஞ்சை கனக்க வைத்த கதை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாசற்ற கொடி

//

மிக்க நன்றி மாசற்ற கொடி...

சீமாச்சு.. said...

ராஜா,
கதை போட்டியில் ஜெயிச்சிடிச்சி போலருக்கே..
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !!

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் வெட்டி... மீ த பஷ்டூ????

பாலகுமார் said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள், வெட்டி !

ரெஜோ said...

வாழ்த்துகள் நண்பரே ! :-)

நாடோடி இலக்கியன் said...

அருமை,

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

RV said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

நிலாரசிகன் said...

மனதை தொடும் கதை.வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் நண்பரே.

யாத்ரா said...

வாசிப்பு முழுவதும் ஒரு வித வலி என்னை துரத்தியபடியே வந்தது, முடியும் போது முழுமையான வலி. நேர்த்தியாக செதுக்கியிருக்கிறீர்கள்

வாழ்த்துகள்

வெட்டிப்பயல் said...

// Seemachu said...
ராஜா,
கதை போட்டியில் ஜெயிச்சிடிச்சி போலருக்கே..
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !!

//

மிக்க நன்றி தல...

எல்லாம் நீங்க கொடுக்குற உற்சாகம் தான் காரணம் :)

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் வெட்டி... மீ த பஷ்டூ????

//

வெண்பூ,
மிக்க நன்றி... சீமாச்சு அண்ணா கொஞ்சம் முன்னாடி வந்து சொல்லிட்டாரு :)

வெட்டிப்பயல் said...

//பாலகுமார் said...
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள், வெட்டி !

//

நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

//ரெஜோ said...
வாழ்த்துகள் நண்பரே ! :-)

//

நன்றி & வாழ்த்துகள் நண்பரே :)

வெட்டிப்பயல் said...

//நாடோடி இலக்கியன் said...
அருமை,

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

//

மிக்க நன்றி நாடோடி இலக்கியன் :-)

வெட்டிப்பயல் said...

// RV said...
உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

//

மிக்க நன்றி RV...

வெட்டிப்பயல் said...

//நிலாரசிகன் said...
மனதை தொடும் கதை.வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் நண்பரே.

//

நன்றி நிலாரசிகன்...

தங்களுக்கு என் வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

// யாத்ரா said...
வாசிப்பு முழுவதும் ஒரு வித வலி என்னை துரத்தியபடியே வந்தது, முடியும் போது முழுமையான வலி. நேர்த்தியாக செதுக்கியிருக்கிறீர்கள்

வாழ்த்துகள்//

மிக்க நன்றி யாத்ரா...

இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்டது :(

Karthik said...

WOW, enna solrathunnu nijamave theriyala! superb one! :)

இரவுப்பறவை said...

கதை அருமை,
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

PPattian said...

முதலில் வாழ்த்துகளும் என் நன்றிகளும் உங்களுக்கு வெட்டி..

உரையாடல் போட்டி முடிவு இடுகையில் கொஞ்சம் அவசரத்தில் பின்னுட்டமிட்டதால் நான் பயன்படுத்திய வார்த்தைகள் தவறான அர்த்தம் ஏற்படுத்தியது போல் இருந்தது..(But my intentions were clear), ஆனால் அதை சரியாகப் புரிந்து கொண்டமைக்கும் அங்கேயே அதை பின்னூட்டமாக இட்டமைக்கும் நன்றி

நான் உங்கள் இரண்டு கதைகளையும் போட்டி முடிவுகளுக்கு முன்னரே படித்து விட்டேன். சாப்ட்வேர் வேலை இழப்பு கதையின் முடிவு எதார்த்தமாக படவில்லை. அதோடு போட்டிக்கான வலு அதில் இல்லை என்று கருதினேன். மற்றபடி கதை நன்றாக இருந்தது.

வாழையடி வாழை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. முக்கிய காரணம், அது நாம் தினம் தினம் கண்கூடாக காணும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அதோடு எதார்த்தம் குறையாமல் நடை கொண்டு சென்றது

மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும் வெட்டி.

வெட்டிப்பயல் said...

// Karthik said...
WOW, enna solrathunnu nijamave theriyala! superb one! :)//

ரொம்ப நன்றிப்பா :)

வெட்டிப்பயல் said...

//இரவுப்பறவை said...
கதை அருமை,
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

August 10, 2009 12//

மிக்க நன்றி இரவுப்பறவை :)

வெட்டிப்பயல் said...

புபட்டியன்,
நன்றி கலந்த பாராட்டுகள்.

அங்க நீங்க சொன்னது எனக்கும் சேர்த்து தான் என்பதால் புரிந்து கொள்வது கடினமாக இல்லை :)

எனக்கு பிடித்தது குட்டிப்பாப்பா தான் :)

எதார்த்தம் என்பது அவர் அவர் பார்வையைப் பொருத்தது. மென்பொருள் துறையில் வேலைப் போனதால் தற்கொலை செய்து கொள்வது எதார்த்தம் இல்லை. ஆனால் உண்மையில் நடந்தது. காதல் தோல்வியால் தற்கொலை\கொலை என்பது எதார்த்தம் அல்ல. ஆனால் அது அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் :)

நான் அந்த கதையை முடித்த விதம் இன்னும் அழகாக இருந்திருந்தால் அது வென்றிருக்கும் என்பது என் எண்ணம்.

இதுக்கு மேல ப்ளேடு போட விரும்பல :)

வாழ்த்திற்கு நன்றி :-)

Anonymous said...

எதார்த்த வாழ்வின் சம்பவத்தை இயல்பான நடையிலே சொல்லி இருக்கிறீர்கள். அருமை...

எதார்த்தம் வெற்றி பெறும், பெற்றிருக்கிறது.

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றிக்கு வாழ்த்துகள் நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

உங்கள் narration இயல்பா யதார்த்தமா இருக்கு.வேலைக்காரி சம்பந்தப்பட்டகளத்தின் மூட் எல்லாம் நல்லா இருக்கு.சில வரிகள் பிடித்தது.

1//ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது//

2//ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது//

குறைகள்:
இந்த வேலைக்காரி - எஜமானி(
கொடூரமாக காட்டி வேலைக்காரியின் சிம்பதியை டிராமத்தனமாக அதிகரிப்பது) கதைகள் நிறைய படித்தாகி விட்டது.

செயற்கையான முடிவு.

//நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. //

ஏன் இந்த தங்கச்சிகள் திடீர் பெரிய மனுஷியாகும் டிராமத்தனமான திருப்பம்?

யதார்த்தமாக இல்லை.

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)